சந்தாதாரர்களைக் கவர்ந்திழுப்பதில் ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் தொடர்ந்து போட்டிப் போட்டு வருகின்றன. ஜியோ, தனது வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) சேவையை வெளியிடத் தொடங்கிய போது இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு காணப்பட்டது. ஏர்டெல் தனது VoWiFi சேவையை 2019 டிசம்பரில் மட்டுமே அறிமுகப்படுத்தியது. ஆனாலும், ஏர்டெல்லின் VoWiFi சேவையை எக்ஸ்ட்ரீம் பைபர் உடன் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், ஜியோ பயன்படுத்துவதன் மூலம் அதன் பயனர்கள் உட்புற வைஃபை நெட்வொர்க் மற்றும் பொது வைஃபை, ஹாட்ஸ்பாட் மூலமாகவும் இந்த சேவையப் பயன்படுத்தலாம்.வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையுடன் பயனர்களின் உட்புற அழைப்பு அனுபவத்தை மேம்படுத்த ஜியோ தற்போது முயற்சிக்கிறது.
இந்த முறையை ஜியோ அறிமுகப்படுத்தினால், நமது செல்போன்களில் சிக்னல் இல்லை என்கிற பேச்சுக்கே இடமில்லை. எவ்வளவு மோசமாக கவரேஜ் சிக்னல் இருந்தாலும் நாம் பேசுவது துல்லியமாக கேட்கும். ஜியோ வாடிக்கையாளர்களுக்கு உண்மையில் இனி கொண்டாட்டம் தான்! வீட்டின் கிச்சன்ல இருந்து பேசினா கேட்காது.. இருங்க வெளியில வர்றேன்.. என்று இனி புலம்ப வேண்டியதிருக்காது!