பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் !! - Asiriyar.Net

Sunday, January 12, 2020

பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் !!





வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகையாகும். 16ம் தேதி மாட்டுப்பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையாகும். 13ம் தேதி, 14ம் தேதிஅரசு விடுமுறையாக அறிவித்தால், தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தமிழக அரசு ஏற்று 2 நாட்கள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கும் என செய்திகள் பரவின. ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடுதல் விடுமுறை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Post Top Ad