கோர்ட்க்கு வந்ததால் ஸ்கூல் போகல.! சிறுமியின் பதிலை கேட்டு உறைந்த நீதிபதி .! - Asiriyar.Net

Sunday, January 12, 2020

கோர்ட்க்கு வந்ததால் ஸ்கூல் போகல.! சிறுமியின் பதிலை கேட்டு உறைந்த நீதிபதி .!





பள்ளி பயில்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என முத்தரிசி என்ற சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் சிறுமி முத்தரிசி , அவரது தந்தை இருவரும் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி பயிலும் ஆறு வயதான ஒன்றாம் வகுப்பு மாணவி முத்தரிசி என்ற சிறுமி தங்கள் பள்ளி பயில்வதற்கு உகந்த சூழ்நிலையை போல மாற்றி தர வேண்டும் என , அவரது தந்தை பாஸ்கரனும் (வழக்கறிஞர்) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில் , கோவில் ஒட்டி வரும் பள்ளி வளாகத்தில் பிச்சைக்காரர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் , சட்டவிரோதமாக செயல் நடைபெறும் இடமாகவும் பள்ளி வளாகம் பயன்பட்டு வருகிறது என கூறினர். மேலும் பள்ளி வளாகம் சுகாதாரம் இல்லாத சூழலால் மாணவ , மாணவியருக்கு அவ்வப்போது உடல்நிலை குறைவு ஏற்படுகிறது எனவே பள்ளி தூய்மைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அமர்விற்கு பட்டியல் இடப்பட்டு இருந்தது. நீதிமன்றத்தில் சிறுமி முத்தரிசி , அவரது தந்தை இருவரும் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்த நீதிபதி சிறுமியை அழைத்து நீ இன்று பள்ளிக்கு போகவில்லையா..? எனக் கேட்டார்.அதற்கு சிறுமி நீதிமன்றத்திற்கு வருவதற்காக பள்ளிக்கு போகவில்லை என கூறினார்.

இதனால் ஆச்சரியமடைந்த நீதிபதி பள்ளிக்கு செல்லாமல் எப்படி நன்றாக படிக்க முடியும்..? இதுபோன்ற வகுப்புகளுக்கு போகாமல் இருக்க கூடாது என அறிவுரை கூறினர்.பின்னர் அந்த சிறுமி பயிலும் பள்ளி குறித்து அரசு தாக்கிய மனுவில் பெரும்பாலான குறைகள் சரி செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் குறைகள் அனைத்தும் முழுமையாக சரி செய்யவில்லை என முத்தரிசி தந்தை பாஸ்கரன் கூறினார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அந்த குறைகளை சரிசெய்ய நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்பின் அடிப்படையில் நிதி ஏற்பாடு செய்யவும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Post Top Ad