Pariksha Pe Charcha 2020 : பிரதமராக நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஒவ்வொன்றும் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. ஆனால், உங்கள் இதயத்தை தொடும் நிகழ்ச்சி எது என யாராவது கேட்டால், இந்த நிகழ்ச்சியை தான் சொல்வேன் என்று மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டில்லி தல்கடோரா உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுத்தேர்வு குறிப்புகள், தேர்வு பயம் நீங்குவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்டவைகளை, பிரதமர் மோடி மாணவர்களிடையே இன்று கலந்துரையாடினார்.
மாணவர்கள் மத்தியில் மோடி உரையாற்றியதாவது: பிரதமராக நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.
ஒவ்வொன்றும் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. ஆனால், உங்கள் இதயத்தை தொடும் நிகழ்ச்சி எது என யாராவது கேட்டால், இந்த நிகழ்ச்சியை தான் சொல்வேன்.
தேர்வு என்பது எனக்கு நெருக்கமானது. மாணவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை நான் எளிதாக புரிந்துகொள்வேன். நான் உங்களின் குடும்பத்தில் ஒருவர். என்னுடைய வார்த்தைகள் மாணவர்களின் வாழ்வில் நேர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.
ஒவ்வொருவரும் புதிதாய் ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தை போல மற்ற துறைகளுக்குக்கும் மாணவர்கள் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன்மூலம் ரோபோட்டிக்ஸ் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடியும். சில பெற்றோர் இதனை டிரண்டாக கருதுகின்றனர். நமது வாழ்க்கை தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. கடின உழைப்பே வெற்றிக்கான வழி. நமது நேரத்தை எவ்வாறு பேலன்ஸ் செய்வது என்பதை நாம் அறிய வேண்டும். இவ்வாறு மோடி உரையாற்றினார்.
தமிழகத்தில் என்னென்ன ஏற்பாடுகள் : தமிழகத்தில், பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளிகளின் மாணவர்கள், இந்த உரையை கேட்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.