மீண்டும் வருகிறது அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் சேல். அதன் ஆபர் விவரங்களை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
ஈ-காமெர்ஸ் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்கான முதல் கிரேட் இந்தியன் சேலை அறிவித்துள்ளது. அதில் முதல்கட்டமாக, ஸ்மார்ட்போன்களுக்கு சுமார் 40 சதவீதம் வரை விலைகுறைப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
SBI வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை அமேசான் இந்தியாவும் SBI வங்கியுடன் இணைந்து வழங்குகிறது. அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 வரை நடைபெற உள்ளது.அமேசான் நிறுவனத்தின் பிரைம் உறுப்பினர்களுக்கு, அமேசான் கிரேட் இந்தியா சேல் 12 மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கும்.
ஜனவரி 18ஆம் தேதி மதியம் 12 மணி முதலே இந்த ஆபர்களை பெற்றுக்கொள்ளலாம். SBI வாடிக்கையாளர்களுக்கு நோ-காஸ்ட் EMI வசதியும் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்ப்ளஸ் 7டி, ரெட்மி நோட் 8 ப்ரோ போன்ற முன்னணி ஸ்மார்ட்போன்களை இந்த நோ-காஸ்ட் EMI வசதி மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஹுவாய், ஓப்போ, விவோ, ஹானர் மற்றும் ரியல்மீ போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு விவரங்கள் 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கிரேட் இந்தியன் சேல் விற்பனையில் மொபைல் பாகங்கள் மிகக்குறைந்த விலையான ரூ. 69 முதல் துவங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதர எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளான HP, JBL, Bose, Sony மற்றும் பல பிராண்டுகள் இந்த விற்பனையில் பங்கேற்கும் எனவும் விற்பனை தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.