நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சார்பில் நாமக்கல் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 37 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 8-வதே தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கங்களின் நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 37
கல்வித் தகுதி :
8-வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரருக்குத் தமிழில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், உடற் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.drbnamakkal.net என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து குறிப்பிட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 150
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.01.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.