அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பது காரணம் என்ன ?? - Asiriyar.Net

Post Top Ad


Sunday, January 5, 2020

அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பது காரணம் என்ன ??
சிலர் அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். பசி இல்லாவிட்டாலும், ஏதாவது ஒன்றினை மென்று கொண்டே இருப்பார்கள். இது ஒரு மனநலம் தொடர்புடைய பாதிப்பு. இந்த பாதிப்பு உடையவர்கள் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வோடோ (அ) ஒருவித வெட்கத்தோடோ இருப்பார்கள். வேலை இழப்பு, விவாகரத்து போன்ற பல நிகழ்வுகளும் இந்த பாதிப்பினை ஏற்படுத்தலாம். இந்த பழக்கம் இருப்பதை அறிவது எப்படி?
* மிகவும் அதிகமான உணவினை இரண்டு மணி நேரத்திற்குள் உண்பார்கள்.
* உண்பதனை கட்டுப்படுத்தவே முடியாது.
* வயிறு நிரம்பி இருக்கும் போதும் உண்பார்கள்.
* மிக மிக வேகமாக உண்பார்கள்.
* தனிமையில் உண்பதனையே விரும்புவார்கள்.
இவ்வாறு உள்ளவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

இப்படி அதிகம் உண்ணும் ப-ழக்கம் உடையவர்களின் வாழ்க்கை தரம் அதிகம் தாழ்ந்து தான் இருக்கும். அவர்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது. இப்பழக்கத்தினை மாற்ற அவரவரும் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் உணவுகளை நீங்கள் உட்கொள்ளும் பொழுதெல்லாம் எழுதி வையுங்கள். சுய ஆய்வு செய்ய இது பெரிதும் உதவும். புரத அளவு தேவையான அளவு உணவில் இருக்க வேண்டும்.
Recommend For You

Post Top Ad