10, +12 பொதுத் தேர்வு! கல்வித்துறை புது அறிவிப்பு!அதிர்ச்சியில் மாணவர்கள்!! - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, January 29, 2020

10, +12 பொதுத் தேர்வு! கல்வித்துறை புது அறிவிப்பு!அதிர்ச்சியில் மாணவர்கள்!!


தமிழகத்தில் 10,11, 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்காக மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும், இப்போது வரையில், பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியாகியும் ப்ளூ பிரிண்ட் வெளியாகாதது பொதுத் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்நிலையில், தேர்வுக்குத் மாணவர்களைத் தயார்படுத்தும் ஆசிரியர்களையும், தேர்வில் எந்த வகை கேள்விகள் கேட்கப்படும் என்று குழப்பமடையச் செய்துள்ளது.
தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக அரசு தேர்வு இயக்ககம் புது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் ப்ளு பிரிண்ட் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும். மாதிரி வினாத்தாளில் உள்ளது போன்று தேர்வில் கேட்கப்படவில்லை என்ற எந்த குழப்பமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது. இது மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


Recommend For You

Post Top Ad