Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, December 4, 2024

பள்ளி வேலை நாட்களோ 220! நடத்த சொல்லும் விழாக்களோ 122...விழி பிதுங்கும் ஆசிரியர்கள்???(பத்திரிகை செய்தி)* 😩

 


பள்ளிக்கல்வித்துறை அறிவித்த ஓராண்டில் 220 பள்ளி வேலை நாட்களில் 120க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் விழாக்களை நடத்த கூறுவதால் கற்பிக்கும் பணி பாதிக்கப்படுகிறது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் குணசேகரன் கூறியுள்ள தகவலானது 


தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்களின் திறனை மேமபடுத்த பல்வேறு திட்டங்கள் நவீன அப்டேட்டுகளை செய்து வருகிறது ஸ்மார்ட் பிளஸ் ஸ்மார்ட் போன் என பல வசதிகள் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டுவரப்பட்டுள்ளன 


கல்வித்துறை திட்டங்கள் அறிவிப்புகள் தேவைப்படும் விபரங்களை உடனுக்குடன் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர்களுடைய அலைபேசியில் அனுப்பப்பட்டு பெறப்படுகிறது 


இதனால் எந்த நேரமும் அலைபேசியும் கையுமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளது 


இத்தகவல்களை அனுப்பிய பிறகு தான் மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது 


மேலும் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு வழங்கும் விலையில்லா 15 வகையான பொருட்களை நேரில் எடுத்துச் சென்று வழங்க அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர் 


கல்வித்துறை அறிவித்துள்ள காமராஜர் விழா அண்ணா விழா கலைஞர் விழா குழந்தைகள் தின விழா உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட விழாக்கள் நிகழ்ச்சிகள் உள்ளன 


இவற்றை நடத்த ஏற்பாடுகள் செய்ய மாணவர்களை தயார்படுத்து ஆசிரியர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை இரண்டு நாட்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டியுள்ளது 


இது தவிர ஆண்ட ஆய்வு அதிகாரிகள் விசிட் என தொடர்பினைகள் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதால் கற்பித்தலில் முழு ஈடுபாடு காண்பிக்க முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது



















No comments:

Post a Comment

LightBlog