10ம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் மாணவர்களின் பெயரை சேர்த்தல் / நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு - DGE Letter - Asiriyar.Net

Friday, December 27, 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் மாணவர்களின் பெயரை சேர்த்தல் / நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு - DGE Letter

 

தற்போது , மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலில் விடுபட்டுள்ள மாணவர்களைச் சேர்த்திடவும் ( Addition ) , இறப்பு ( Death ) / மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கம் ( Deletion ) செய்திடவும் இத்துடன் இணைத்தனுப்பப்படும் கூகுள் படிவத்தினை ( Google Sheet ) 02.01.2025 - க்குள் பூர்த்தி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களின் பெயர்களை மட்டும் பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கம் செய்திடும் பட்டியலில் பதிவு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


 நீண்டநாள் விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களின் உரிய பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே நீக்கம் செய்திட கோரவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


 ஏற்கனவே , பெயர்பட்டியலில் நீக்கம் கோரி இவ்வலுவலகத்திற்கு கடிதங்கள் அனுப்பி இருப்பினும் தற்போது , தேர்வெண்ணுடன் அம்மாணவர்களின் விவரங்களையும் கூகுள் படிவத்தில் ( Google Sheet ) தவறாமல் பூர்த்தி செய்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.







No comments:

Post a Comment

Post Top Ad