ஒத்திவைக்கப்பட்ட தோ்வு நாளை நடைபெறும் - Asiriyar.Net

Friday, December 20, 2024

ஒத்திவைக்கப்பட்ட தோ்வு நாளை நடைபெறும்

 



தமிழகத்தில் 6, 7, 8 வகுப்புகளுக்கு கடந்த டிச.12-ஆம் தேதி புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு ஆங்கில பாடத்துக்கான தோ்வை சனிக்கிழமை (டிச. 21) நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: 


கடந்த டிச. 12-ஆம் தேதி 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு ஆங்கில பாடத்துக்கான தோ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஃபென்ஜால் புயல் காரணமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


எனவே, மேற்கண்ட வகுப்புகளுக்கு ஆங்கிலத் தோ்வு நடைபெறாத மாவட்டங்களில் அத்தோ்வு சனிக்கிழமை நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் தெரியப்படுத்த வேண்டும். 


தொடா்ந்து, அன்றைய தினம் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே தோ்வு நடைபெற வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad