மாவட்ட கல்வித் துறையில் சில வட்டார வள மைய பயிற்றுனர்களின் ஆட்டம் ஓவராக உள்ளதாம். குறிப்பாக, இவர்கள் கடந்த சில மாதங்களாக தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்று மிரட்டும் தோனியில் பேசுவது, 'எமிஸ்' இணையதளத்தில் 'டேட்டா' பதிவு விவரங்கள் ஏன் பெண்டிங் உள்ளது என, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேள்வி கேட்பது என அதிகார மையங்களாக வலம் வருகின்றனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளி்ல் 'எமிஸ்' இணையதளத்தில் டேட்டா பதிவு விவரங்கள் பெண்டிங் இருப்பின் உடனடியாக முடிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு பதிலாக 'எமிஸ்' இணையதள 'டேட்டா' பதிவு சம்பந்தமாக பட்டதாரி ஆசிரியர் தகுதியில் உள்ள சில வட்டார வள மைய பயிற்றுனர்கள் தங்களிடம் கேள்வி கேட்பதா என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
இது மட்டுமின்றி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வருவாய் ஈட்டக் கூடிய பிரிவிலும் இடமாறுதல் வாங்கி கொடுத்து விடுவதாக சக வட்டார வள மைய பயிற்றுனர்கள் புலம்புகின்றனர்.
No comments:
Post a Comment