சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் - Asiriyar.Net

Thursday, December 26, 2024

சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம்

 



அரசு நிதியுதவி பெறும் தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளிகளில், தகுதித் தேர்வு அடிப்படையில், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், துவரலகண்மாய் ஆர்.சி., நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், 2022ல் இறந்ததால் ஏற்பட்ட காலி இடத்துக்கு, அப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய ஆரோக்கியசாமி பதவி உயர்த்தப்பட்டார்.


இது சார்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் பிறப்பித்துள்ள உத்தரவு:


பொதுவாக, சிறுபான்மை பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கும், பதவி உயர்வுகளுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.


மேலும், சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு குறித்து, மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அதில் இறுதி தீர்ப்பை பெற்ற பின், இவ்விவகாரத்தில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad