எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி தேதி மாற்றம் - Asiriyar.Net

Friday, December 13, 2024

எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி தேதி மாற்றம்

 

எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024 2025 ஆம் கல்வியாண்டு 4 மற்றும் 5 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவத்திற்கான மாவட்ட அளவிலான பயிற்சி நடத்துவது சார்ந்து 


அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்,


 4 & 5 ஆம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலான எண்ணும் எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 11.12.2024 மற்றும் 12:12.2024 ஆகிய இரு நாட்களில் நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் காரணத்தால் மேற்கண்ட இப்பயிற்சியானது சில மாவட்டங்களில் நடத்தப்படாத நிலை உள்ளது. எனவே, 4 & 5 ஆம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலான எண்ணும் எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 18.12.2024 மற்றும் 7.122024 ஆகிய இரு நாட்களில் நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.






No comments:

Post a Comment

Post Top Ad