Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, December 11, 2024

தலைமை ஆசிரியர் கைது

 

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே, பாப்பாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜடமங்களத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெகன், 15, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் ஜெகன், பள்ளி மாடியில் உள்ள வகுப்பறையை கூட்டி சுத்தம் செய்துள்ளார்.


அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் கார் மீது எதிர்பாராமல் துடைப்பம் விழுந்ததால், தலைமை ஆசிரியர், மாணவனை  அடித்ததாக கூறப்படுகிறது. கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவனுக்கு, முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.


மாணவனின் பெற்றோர் புகார்படி, தொட்டியம் போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து, நேற்று சந்திரமோகனை கைது செய்தனர்.


நீதிபதி உத்தரவின்பேரில் தலைமை ஆசிரியா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.



No comments:

Post a Comment

LightBlog