கருணை அடிப்படையிலான வாரிசு வேலை - புது அறிவிப்பு - Asiriyar.Net

Monday, April 8, 2024

கருணை அடிப்படையிலான வாரிசு வேலை - புது அறிவிப்பு

 



பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசார் இறந்து போனாலும், வாரிசுகள் கருணை அடிப்படையிலான பணிக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


காவல்துறை தலைமையகத்தில் இருந்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பணியின் போது இறந்த போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசார் இறந்து போனாலும், அவரின் வாரிசுகளும் விண்ணப்பிக்கலாம்.


ஓய்வு பெற ஐந்து ஆண்டு கள் இருக்கும் முன், நோய் வாய்ப்பட்டு செயல்படாத முடியாத நிலையில் உள்ள போலீசாரின் வாரிசுகளும் தகுதியானவர்களே. காணாமல் போன போலீஸ்காரர், ஓய்வு பெறும் தேதிக்கு முன் இறந்து விட்டார் என தகவல் கிடைத்து, அதை நீதிமன்றம் உறுதி செய்திருந்தால், அவரின் வாரிசுகளும் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad