தேர்வு நாட்களுக்கு மட்டும் மாணவர் வருகை போதுமானதா?- செய்தித்தாள் செய்திகள்-குழப்ப நிலை போக்குதல் மற்றும் 23 ஆம்தேதி சித்ரா பௌர்ணமி- தேர்வு நாள் மாற்றம் வேண்டுதல்- சார்பு
தொடக்கக்கல்வித்துறையில் 1 முதல் 8 ஆம்வகுப்பு மானவர்களுக்கு ஏப்ரல் 2முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது, 10,12தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் 22,23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது
இந்நிலையில் எட்டாம் தேதிக்குப் பிறகு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டுமா அல்லது ஆசிரியர்கள் மட்டும் வந்தால் போதுமா என்ற குழப்பம் எல்லா இடங்களிலும் நிலவி வருகிறது
காரணம் செய்தித்தாள்களில் எட்டாம் தேதிக்கு பிறகு தேர்வு நாட்களில் மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என தகவல்கள் பரப்பப்படுவதால் இக் குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது
மேலும் 22 23 ஆகிய இரண்டு நாட்களில் முறையே அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சித்ரா பௌர்ணமி தினம் கொண்டாடப்படுவதால் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வாய்ந்த கிரிவலம் நடைபெற உள்ளது.
இந்நாட்களில் இவ்விரு நகரங்களிலும் விழாவின் காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுவதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் பெரும் சிரமங்கள் நிலவும் .சித்ரா பௌர்ணமி அன்று தமிழ்நாடு முழுவதும் விசேட தினம் என்பதால் பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்வதில் சிரமம் நிலவுகிறது. எனவே ஒட்டுமொத்தமாக 23 க்கு பதில் 24ஆம் தேதி தேர்வு என மாற்றம் செய்து அறிவிக்கலாம்
அல்லது திருவண்ணாமலை மதுரை போன்ற விழா நடைபெறும் நகரங்களுக்கு மட்டுமாவது தேதியை மாற்றி அறிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம்
மேற்கண்ட குழப்பங்களுக்கு விரைவில் தாங்கள் தீர்வு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். நன்றி
Click Here to Download - Holiday Issue - Association Letter to Director - Pdf
No comments:
Post a Comment