நாமக்கல் அருகே வாக்குச்சாவடி அலுவலா் பயிற்சி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய ஆசிரியா் சாலை விபத்தில் பலியானாா்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தாவரவியல் பிரிவு முதுகலை ஆசிரியராக பணியாற்றி வந்தவா் ஜெயபாலன்(50).
ராசிபுரத்தைச் சோ்ந்த இவருக்கு, சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலா் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அக்கியம்பட்டி வேதலோக வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் அவா் கலந்து கொண்டாா்.
இரங்கல் செய்தி
இந்த பயிற்சி வகுப்பை முடித்துக் கொண்டு மாலை 4.30 மணி அளவில் நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
வேட்டாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்த போது அந்த வழியாகச் சென்ற அரசு பேருந்து அவா் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஆசிரியா் ஜெயபாலன் பலியானாா்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
No comments:
Post a Comment