பாட்னா: வெறும் 35 ரூபாய் - அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் டிரான்ஸ்பர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 8, 2024

பாட்னா: வெறும் 35 ரூபாய் - அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் டிரான்ஸ்பர்

 

பாட்னா: வெறும் 35 ரூபாய்க்காக, பள்ளி ஆசிரியர் ஒருவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.. என்ன நடந்தது? யார் அந்த டீச்சர்?


பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ளது அந்த தொடக்க பள்ளி... ராஜாவுன் தொகுதியில் அஸ்மானிசாக் கிராமத்தில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நீது குமாரி என்ற டீச்சர் பணியாற்றி வருகிறார். கடந்த புதன்கிழமையன்று, வழக்கம்போல் பள்ளி நடந்து கொண்டிருந்தது.


வகுப்பில் நுழைந்த டீச்சர் நீது குமாரி, அங்கிருந்த ஒரு மாணவனிடம் தன்னுடைய பையில் வைத்திருக்கும் வாட்டர் பாட்டிலை கொண்டுவரும்படி சொன்னார்.. அந்த மாணவனும் டீச்சருக்கு தண்ணீர் கொண்டுவந்து தந்துள்ளான்.


சிறிது நேரம் கழித்து, தன்னுடைய பர்ஸ்ஸை நீது குமாரி திறந்து பார்த்துள்ளார். அப்போது, பர்ஸில் வைத்திருந்த 35 ரூபாய் காணாமல் போய்விட்டதாக கூறினார்.. உடனே அந்த 35 ரூபாய் குறித்து தன்னுடைய மாணவர்களிடம் விசாரித்திருக்கிறார்.


மாணவர்கள்: மாணவர்கள் யாருமே அந்த பணத்தை எடுக்கவில்லை என்று சொன்னார்கள். ஆனால், டீச்சர் விடவில்லை.. உங்களில் ஒருவன்தான், என் 35 ரூபாய் பணத்தை திருடியிருக்கிறீர்கள் என்று சொல்லி, தன்னுடைய பள்ளியிலிருந்த மொத்த மாணவர்களையும் அழைத்துக் கொண்டு, அருகிலிருந்த கோயிலுக்கு சென்றுள்ளார்.


பள்ளியில் மொத்தம் 122 மாணவர்கள் இருந்திருக்கிறார்கள்.. இந்த 122 மாணவர்களுக்கும் சேர்த்து 2 டீச்சர்கள் மட்டுமே பாடம் நடத்துகிறார்கள்.. இந்த சம்பவம் நடந்த புதன்கிழமை, இன்னொரு டீச்சர் ஸ்கூலுக்கே வரலையாம்.


சத்தியம்: 122 பிள்ளைகளுக்கும், நீதி குமாரி மட்டுமே பாடம் நடத்தியிருக்கிறார். இந்த 122 பேரையும் அழைத்துக் கொண்டு, கோவிலுக்குள் நுழைந்தார் நீது குமார். 35 ரூபாய் பணத்தை எடுக்கவேயில்லை என்று கடவுள் மீது சத்தியம் செய்ய சொன்னாராம்.. இதனால், மாணவர்களும் அப்படியே சத்தியம் செய்திருக்கிறார்கள்.


ஆனால், இந்த விஷயம் அதற்குள் ஊர்மக்களுக்கு தெரிந்துவிட்டது. கோயிலுக்குள் பிள்ளைகளை அழைத்து சென்றதுமே, ஊர்மக்கள், பெற்றோர்கள் கொந்தளித்துவிட்டார்கள்.. உடனே டீச்சருக்கு எதிராக போராட்டத்திலும் இறங்கினர்.


பணம் எங்கே: ஆசிரியை நீது குமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் பள்ளியை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி மொத்த கிராம மக்களும் கோரிக்கை விடுத்தனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு கல்வி அதிகாரி குமார் பங்கஜ் விரைந்து வந்தார். டீச்சரிடம் இதை பற்றி விசாரித்தார்.


"எந்தவொரு மாணவரையும் இப்படியெல்லாம் சந்தேகிக்கலாமா? தன் வகுப்பு மாணவர்களை, இப்படி சந்தேகிப்பது முறையற்றது" என்று கல்வி அதிகாரி கண்டித்தார்..


விளக்கம்: அதற்கு அந்த டீச்சர், என் பணம் 35 ரூபாய் காணாமல் போனதால்தான் இப்படி விசாரிக்க நேர்ந்தது.. அதுவும் மாணவர்களிடம் விசாரிக்க மட்டுமே செய்தேன்.. ஆனால், மாணவர்கள்தான், அருகிலுள்ள கோயிலுக்கு அழைத்து சென்று, கடவுள் மீது சத்தியம் செய்ய செய்ய போனார்கள்.. அதற்குள் கிராம மக்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டனர். இதை பார்த்ததுமே நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்..


18 வருடமாக இந்த பள்ளியில்தான் பாடம் நடத்தி கொண்டிருக்கிறேன்.. அப்படியிருக்கும்போது, என் மாணவர்களை நானே எப்படி சந்தேகிப்பேன்? ஆனாலும், என் திருடு போன பணம் 35 ரூபாய் கிடைக்கவேயில்லை" என்றாராம் டீச்சர்


பரபரப்பு: எனினும் டீச்சரின் இந்த விளக்கத்தை ஏற்காத கல்வி அதிகாரி, நீது குமாரியை வேறு இடத்திற்கு டிரான்ஸ்பர்க்கு அதிரடியாக உத்தரவிட்டார்.. 35 ரூபாய்க்காக, மாணவர்களை இப்படி கீழ்த்தரமாக ஆசிரியை நடத்திய சம்பவம், மிகப்பெரிய அதிர்வலையையும், விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.




Post Top Ad