ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி தலைமை ஆசிரியர்களிடமிருந்து ஊதிய உயர்வு தொகையை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், புலிவலம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் நாடியம்மாள். இவருக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வை நிறுத்தும்படி திருவாரூர் வட்டார கல்வி அதிகாரி கடந்த 2021 டிசம்பர் 24ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை அமல்படுத்தவும், இதுவரை பெற்ற ஊதிய உயர்வுத் தொகையை திரும்ப வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தலைமை ஆசிரியர் நாடியம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் ஆர்.அருணா, கே.பிச்சையம்மாள் ஆகியோரும் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தலைமை ஆசிரியர்களிடம் இருந்து ஊதிய உயர்வு தொகையை திரும்ப வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment