TET தேர்வு ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் – அரசின் முடிவு என்ன? - Asiriyar.Net

Sunday, November 26, 2023

TET தேர்வு ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் – அரசின் முடிவு என்ன?

 



வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க கூடாது என மீண்டும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



டெட் தேர்வு:


தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அடிப்படையில் மட்டுமே பணியிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களிடம் கலந்து பேசி வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


ஆனால், ஆசிரியர்கள் அதனையும் மீறி வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து முதல்வர் அவர்கள் கலந்தோசித்து அறிவிப்பினை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad