வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு:
வருமான வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் கணக்கு விபரங்கள், இ - வெரிபிகேஷன் என்ற, ஆன்லைன் சரிபார்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை, 2021ல் அறிமுகமானது.
வருமான வரித்துறையின், https://incometaxindia.gov.in/ என்ற இணையதளத்தில், வரி செலுத்துவோருக்கான இணைய பக்கத்தில், ஆண்டு கணக்கு விபரங்களுடன், நிதி பரிவர்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.
தாங்கள் தாக்கல் செய்த கணக்கு விபரங்கள் மற்றும் வங்கி நிதி பரிவர்த்தனைகளை சரிபார்த்து கொள்ளவும். வரி கணக்கு அறிக்கைக்கும், நிதி பரிவர்த்தனைக்கும் இடையே முரண்பாடு இருந்தால், மேம்படுத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யலாம். சரியாக இருந்தால், சம்மதம் என ஆன்லைன் பதிவை மேற்கொள்ளவும்.
இதில் முரண்பாடுகள் இருந்தால், வரி செலுத்துபவரின் ஆவணங்கள், 'சோர்ஸ்' என்ற மூல ஆதாரங்களுடன் ஒப்பிடப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment