JEE தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை படித்தால் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்! - Asiriyar.Net

Tuesday, November 28, 2023

JEE தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை படித்தால் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்!

 



ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை அவசியம் படியுங்கள்; நீங்கள் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து, என்.ஐ.டி.,களில் சீட் பெறலாம்.


JEE Mains 2024: தேசிய தேர்வு முகமை இந்த வாரம் கூட்டு நுழைவுத் தேர்வுகளுக்கான (JEE) முதன்மை தேர்வு 2024க்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் — http://jeemain.nta.ac.in/ இல் தொடங்கியது. இந்த பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் உள்ளது.


இந்தநிலையில், குறைவான பாடத்திட்டத்தை படித்து அதிக மதிப்பெண் பெறும் ரகசியத்தை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். அதில், ஜே.இ.இ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் 98 அத்தியாயங்கள் உள்ளன. இதில் வெறும் 32 அத்தியாயங்களை மட்டும் தெளிவாக படித்தால் 150+ அல்லது 96%க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறலாம். நீங்கள் 150+ மதிப்பெண்களை எடுத்தால், திருச்சி, வாராங்கல் உள்ளிட்ட முன்னணி என்.ஐ.டி.,களில் சீட் பெறலாம்.


இயற்பியலில் அத்தியாயம் வாரியாக எதிர்ப்பார்க்கப்படும் மதிப்பெண்கள்


Current Electricity – 6.94

Gravitation – 5.42

Magnetic Effects of Current – 4.86

Electrostatics – 4.72

Ray Optics – 4.58

Work Power Energy – 3.61

Semiconductors – 3.47

Thermodynamics – 3.47

Dual Nature of Matter – 3.47

Motion in Two Dimensions – 3.33

Electromagnetic Induction – 3.33

Motion in One Dimension – 3.19


வேதியியலில் அத்தியாயம் வாரியாக எதிர்ப்பார்க்கப்படும் மதிப்பெண்கள்


Coordination Compounds – 7.36

General Organic Chemistry – 5.69

S Block Elements – 5.28

Chemical Bonding and Molecular Structure – 4.86

Solutions – 4.31

Thermodynamics (C) – 4.17

Structure of Atom – 4.03

P Block Elements (Group 15, 16, 17, 18) – 3.75

D and F Block Elements – 3.61

Amines – 3.47

Chemical Kinetics – 3.47


கணிதத்தில் அத்தியாயம் வாரியாக எதிர்ப்பார்க்கப்படும் மதிப்பெண்கள்


Three Dimensional Geometry – 10.00

Binomial Theorem – 6.81

Sequences and Series – 6.25

Vector Algebra – 5.83

Permutation and Combination – 5.69

Functions – 5.56

Definite Integration – 4.72

Matrices – 4.17

Probability – 3.75


No comments:

Post a Comment

Post Top Ad