தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 2023 - தேர்வு முடிவுகள் - செய்திக்குறிப்பு - Asiriyar.Net

Tuesday, November 28, 2023

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 2023 - தேர்வு முடிவுகள் - செய்திக்குறிப்பு

 

அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு , 07.10.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . 1,27,673 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.


 இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ .1000 / வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ .10,000 / - வழங்கப்படும் . 


இத்தேர்வின் முடிவுகள் 01.12.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . எனவே இத்தேர்வெழுதிய மாணாக்கர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணாக்கர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.





No comments:

Post a Comment

Post Top Ad