ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் - அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 30, 2023

ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் - அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது

 
விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய் நல்லூர் அருகே ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்


திருவெண்ணைநல்லுர் அடுத்த பேரங்கியுரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில் 11,12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர் புதன்கிழமை மது போதையில் பள்ளிக்கு வந்தனராம் . அவர்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதுடன் ,அதைக் கண்டித்த ஆசிரியர்கள் ,ஆசிரியைகளை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம் . இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லுர் போலீஸ் வழக்குப் பதிந்து ,17 வயதுடைய 3 மாணவர்கள் 18 வயதுடைய ஒருவர் என மொத்தம் 4 மாணவர்கள் கைது செய்தனர் 


Post Top Ad