பள்ளிகளில் தவறு நடந்தால் தலைமையாசிரியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நேற்று துவங்கியுள்ளது.
அங்கிருந்து இணையவழி மூலம் மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் அரசு, உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களிடம் அவர் பேசியதாவது:
மாநிலத்தில் இதுவரை 191 தொகுதிகளில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்துள்ளேன். சில தவறுகள் நடந்துள்ளன. அவற்றை சரிசெய்ய வேண்டும். பள்ளிக்கு தலைமையாசிரியர் தான் கேப்டன். மதிப்பெண்ணிற்காக பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்தை ஆசிரியர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் எந்த பிரச்னை வந்தாலும் தலைமையாசிரியர் தான் பொறுப்பு. அவர்கள் தான் பள்ளி, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இணையவழியில் இதுவரை 18 மாவட்டங்களில் 3200 தலைமையாசிரியர்களிடம் பேசியுள்ளேன். அனைத்து பள்ளிகளுக்கும் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
தேவைப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் பள்ளிகளுக்கு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன், இணை இயக்குநர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment