பள்ளிக்கல்வி இயக்குநரிடம் பதவி உயர்வு சம்பந்தமாக ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு - Asiriyar.Net

Tuesday, November 21, 2023

பள்ளிக்கல்வி இயக்குநரிடம் பதவி உயர்வு சம்பந்தமாக ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு

 தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கமும் , மதிப்புமிகு. பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் சந்திப்பும் 20-11-2023


தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக மதிப்புமிகு. பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் மற்றும் இயக்குனர்களை  சந்தித்து நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கைகள், 


1.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு,


2. ஊக்க ஊதிய உயர்வு அரசாணை 95யை மறுபரிசீலனை செய்யுமாறும், 


3.முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு


4.ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியேற்ற நாளை பதவிஉயர்வுக்கு எடுத்து கொள்ள வேண்டும்


5.DI  நடுநிலைப்பள்ளி பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்


 6.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை நேர்முக உதவியாளராக நியமிக்க வேண்டும்,


6.வட்டார வளமைய மேற்பார்வையாளராக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்,


7. தொகுப்பு ஊதிய காலத்தை பணி காலமாக கருத வேண்டும்


உள்ளிட்ட கோரிக்கைகளையும் மற்றும்


 8.மாநில முன்னுரிமை பட்டியல் விரைவில் தயார் செய்து வருகிற பொது மாறுதல் கலந்தாய்வில் நடைமுறை படுத்த வேண்டும்


 போன்ற கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

 *மாநில மையம்

 *தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்


Post Top Ad