டிசம்பரில் 18 நாள்கள் வங்கிகள் இயங்காது? - Asiriyar.Net

Wednesday, November 29, 2023

டிசம்பரில் 18 நாள்கள் வங்கிகள் இயங்காது?

 



டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 18 நாட்கள் வங்கிகள் இயங்காது என வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.


பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.


டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:


டிசம்பர் 1, 2023 - வெள்ளிக்கிழமை - மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை நாள் (நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம்)

டிசம்பர் 3, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 4, 2023 - திங்கட்கிழமை - புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவா, திரிபுரா)

டிசம்பர் 9, 2023 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை

டிசம்பர் 10, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 12, 2023 - செவ்வாய்க்கிழமை - பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)

டிசம்பர் 13, 2023 - புதன்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)

டிசம்பர் 14, 2023 - வியாழக்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)

டிசம்பர் 17, 2023 - ஞாயிற்றுக்கிழமை


டிசம்பர் 18, 2023 - திங்கட்கிழமை - யூ சோஸோதாமின் இறந்த நாள் (மேகாலயா)
டிசம்பர் 19, 2023 - செவ்வாய்க்கிழமை - கோவா விடுதலை நாள் (கோவா)
டிசம்பர் 23, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
டிசம்பர் 24, 2023 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 25, 2023 - திங்கட்கிழமை - கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26, 2023 - செவ்வாய்க்கிழமை - கிறிஸ்துமஸ் (மேகாலயா, தெலுங்கானா)

டிசம்பர் 27, 2023 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ் (மிசோரம்)

டிசம்பர் 30, 2023 - சனிக்கிழமை - யு கியாங் நங்பா (சிக்கிம், மேகாலயா)

டிசம்பர் 31, 2023 - ஞாயிற்றுக்கிழமை





No comments:

Post a Comment

Post Top Ad