'ஓய்வு பெற்றோருக்கான பண பலன்கள் வழங்கப்படும்' - அமைச்சர் - Asiriyar.Net

Sunday, August 13, 2023

'ஓய்வு பெற்றோருக்கான பண பலன்கள் வழங்கப்படும்' - அமைச்சர்

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:


கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த, ஊதிய நிலுவை தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது.


பணிக்காலத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள், கடந்த இரண்டாண்டு காலத்தில், 1,500 கோடி ரூபாய், 3 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இன்னும், 4 மாதங்களுக்குள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.Post Top Ad