தேர்தல் வாக்குறுதி - பகுதி நேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 16, 2023

தேர்தல் வாக்குறுதி - பகுதி நேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்!

 திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் :


பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்:


சுதந்திர தினத்தை ஒட்டி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது :


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது கடந்த 2012-ம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களாக 16 ஆயிரம் பேர் 

கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் அப்போது ரூபாய் 5 ஆயிரம் சம்பளத்தில் அமர்த்தப்பட்டனர்.


10 ஆண்டு அதிமுக ஆட்சியில் இவர்களின் சம்பளம் ரூபாய் 10 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டது.


இந்த நிலையில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தது.


தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆகிறது.


ஆனாலும் முதல்வர் இதுவரை பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை.


பணிநிரந்தரம் கனவோடு பணிபுரிந்தவர்களில் இப்போது ஆயிரம் பேர் உயிரோடு இல்லை. மேலும் 3 ஆயிரம் பேர் வயதுமூப்பு பணிஓய்வு கொடுக்கப்பட்டது.


இதனால் 4 ஆயிரம் காலியிடம் ஆகிவிட்டது.


இப்போது 12 ஆயிரம் பேர் தான் பணி செய்கிறோம்.


தற்காலிகப் பணி செய்கின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டாக மே மாதம்கூட சம்பளம் வழங்க அரசு முன்வரவில்லை.


பொங்கல் போனஸ் வழங்கவில்லை.


இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை.


12 ஆண்டாக இப்படியே தான் நடக்கிறது.


எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை.


12 ஆயிரம் பேரின் குடும்பங்களும் பரிதவித்து வருகின்றோம்.


முன்பு திமுக சட்டமன்றத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அப்போதைய அதிமுகவிடம் பலமுறை கோரிக்கை வைத்தது.


இப்போது திமுக அதை நிறைவேற்றும் இடத்திலே இருக்கிறது.


திமுக வைத்த கோரிக்கையை திமுகவிடமே இப்போது அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் வைக்கிறது.


பகுதிநேர ஆசிரியர்களும் திமுக 181-வது வாக்குறுதிபடி பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி முதல்வரிடம் பலமுறை மனு கொடுத்து உள்ளோம்.


கவன ஈர்ப்பு போராட்டமும் நடத்தி வருகிறோம்.


அரசியல் கட்சிகள், ஆசிரியர் அமைப்புகள், ஜாக்டோ ஜியோ என அனைவரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே வருகின்றனர்.


மனிதாபிமானம், மனிதநேயம் கொண்டு பகுதிநேர ஆசிரியர்களை  முதல்வர் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.


***********************

S.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்,

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

செல் : 9487257203


Post Top Ad