லேசான மயக்கமும் அடைந்தார். இதையடுத்து அவருடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் அமைச்சரை உடனடியாக காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷை சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அங்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலையை பரிசோதித்தனர்.
அதில் அமைச்சருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாலும், வயிற்றுவலியாலும் அவர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே, அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தனர். அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அங்கு திரண்டனர். இதனிடையே, சிகிச்சைக்கு பிறகு ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு பெங்களூர் சென்றார். பெங்களூர் - ஓசூர் சாலையில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு, பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல் நிலை குறித்து பெங்களூர் மருத்துவமனை இன்று காலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உடல் நிலை சீராக உள்ளது. அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசன வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராகவே உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment