1) இ.எம்.ஐ 40 சதவிகிதத்துக்குள்...
நம் வசதியைப் பெருக்கிக் கொள்வதற்காகச் சொந்தமாக வீடு, கார், ஏ.சி., ஃப்ரிட்ஜ் எனப் பலவற்றையும் இ.எம்.ஐ மூலம் வாங்குகிறோம். இவற்றுக்காக இ.எம்.ஐ செலுத்தும் தொகை 30-40 சதவிகிதத்துக்குள் இருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு வழி. அதற்குமேல் செல்லும்போது, அன்றாடச் செலவுகளுக்குப் பணமில்லாமல் தவிக்க வேண்டியிருக்கும். இ.எம்.ஐ தொகையை திரும்பச் செலுத்தும்போது அதிக வட்டியுள்ள கடன்களை முதலில் செலுத்திவிட வேண்டும்.
2) 50:20:30
மாதச் சம்பளத்தில் எவ்வளவு செலவு செய்யலாம், எவ்வளவு சேமிக்கலாம் என்பது நமக்குத் தெரிவதில்லை. மனம்போன போக்கில் செலவு செய்யாமலிருக்க, 50:20:30 என்ற விதிமுறை நமக்கு உதவும். அதாவது, நாம் வாங்கும் சம்பளத்தில் 50% வீட்டுச் செலவுகளுக்கு என வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, வீட்டு வாடகை, மின் கட்டணம், மளிகைச் சாமான்கள் போன்றவை. 20% பணத்தை எதிர்காலச் சேமிப்புக்காக அல்லது முதலீட்டுக்காக ஒதுக்கிவைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி., கோல்டு இ.டி.எஃப் போன்ற திட்டங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். இந்த 70% தொகை போக மீதமிருக்கும் 30 சதவிகிதத்தை அன்றாடப் போக்குவரத்துச் செலவு, உணவு, உடை மற்றும் பொழுதுபோக்குச் செலவுகளுக்காகப் பயன்படுத்தலாம்.
Vikatan
Subscribe
செய்திகள்
இதழ்கள்
விகடன் ஸ்பெஷல்
சினிமா
சினிமா விருதுகள்
ஆன்மிகம்
விளையாட்டு
லைஃப் ஸ்டைல்
`சிறுவயதிலிருந்தே அரசியல் ஆசை!' - ஊராட்சித் தலைவரான 21 வயது கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி
இலங்கைத் தமிழ் அகதிகள் நினைப்பது என்ன? - அரசின் அச்சுறுத்தலும் ஜூ.வி கருத்துக் கேட்பு முடிவுகளும்!
`400 ரூபாய் சம்பளம் தர்றேன்னு சொன்னாங்க சார்!'- வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியமர்த்தப்பட்ட சிறுவன்
`இட்லிக்குச் சட்னி இல்லை; அரைவேக்காடு சாப்பாடு!'- அறந்தாங்கி வாக்கு எண்ணிக்கை மைய அதிர்ச்சி
`ஓட்டு வங்கியே இல்லாதபோது, சீட் மட்டும் எதற்கு?!' -அன்புமணியைக் கொந்தளிக்க வைத்த அமைச்சர்கள்
`வாக்கு எண்ணிக்கை நாளைவரை நீட்டிக்க வாய்ப்பு!' - மாநில தேர்தல் ஆணையம்

vikatan
business
investment
Published:Today at 3 PMUpdated:Today at 3 PM
40%-க்குள் இ.எம்.ஐ to 20/4/10 ஃபார்முலா... - 10 ஃபைனான்ஷியல் விதிமுறைகள்!
விகடன் டீம்
நீங்கள் செலுத்தும் மொத்த இ.எம்.ஐ தொகையானது உங்கள் ஆண்டு வருமானத்தில் 5 மடங்குக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது
ஃபைனான்ஷியல்
ஃபைனான்ஷியல்
1) இ.எம்.ஐ 40 சதவிகிதத்துக்குள்...
நம் வசதியைப் பெருக்கிக் கொள்வதற்காகச் சொந்தமாக வீடு, கார், ஏ.சி., ஃப்ரிட்ஜ் எனப் பலவற்றையும் இ.எம்.ஐ மூலம் வாங்குகிறோம். இவற்றுக்காக இ.எம்.ஐ செலுத்தும் தொகை 30-40 சதவிகிதத்துக்குள் இருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு வழி. அதற்குமேல் செல்லும்போது, அன்றாடச் செலவுகளுக்குப் பணமில்லாமல் தவிக்க வேண்டியிருக்கும். இ.எம்.ஐ தொகையை திரும்பச் செலுத்தும்போது அதிக வட்டியுள்ள கடன்களை முதலில் செலுத்திவிட வேண்டும்.
2) 50:20:30
மாதச் சம்பளத்தில் எவ்வளவு செலவு செய்யலாம், எவ்வளவு சேமிக்கலாம் என்பது நமக்குத் தெரிவதில்லை. மனம்போன போக்கில் செலவு செய்யாமலிருக்க, 50:20:30 என்ற விதிமுறை நமக்கு உதவும். அதாவது, நாம் வாங்கும் சம்பளத்தில் 50% வீட்டுச் செலவுகளுக்கு என வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, வீட்டு வாடகை, மின் கட்டணம், மளிகைச் சாமான்கள் போன்றவை. 20% பணத்தை எதிர்காலச் சேமிப்புக்காக அல்லது முதலீட்டுக்காக ஒதுக்கிவைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி., கோல்டு இ.டி.எஃப் போன்ற திட்டங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். இந்த 70% தொகை போக மீதமிருக்கும் 30 சதவிகிதத்தை அன்றாடப் போக்குவரத்துச் செலவு, உணவு, உடை மற்றும் பொழுதுபோக்குச் செலவுகளுக்காகப் பயன்படுத்தலாம்.
3) இன்ஷூரன்ஸ் என்ற ஆபத்பாந்தவன்!
குடும்பத்துக்காகச் சம்பாதிக்கும் நபர் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் வரை குடும்பத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் அவர் இல்லாமல் போகும்போது, அந்தக் குடும்பத்தின் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பது இன்ஷூரன்ஸ். வீடு, கார் எனப் பலவற்றையும் வாங்குபவர்கள் ஆபத்பாந்தவனாக இருக்கும் இன்ஷூரன்ஸை எடுக்காமல் போவதால், குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார்கள். இதைத் தவிர்க்க, ஒருவர் சம்பாதிக்கும் ஆண்டு வருமானத்தைப்போல 35 மடங்கு தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். அதாவது ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் என்றால், அவருக்குத் தேவைப்படும் காப்பீட்டுத் தொகை = 10,00,000 X 35 = ரூ.3,50,00,000.
4) 20/4/10 ஃபார்முலா
`சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும்’ என்பது இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் ஆசை. வாங்குவதில் தவறில்லை. ஆனால், அதை வாங்குவதற்கு முன்னர் அதற்காக வாங்கும் கடனை அடைப்பதற்கு நம்மிடம் ஒரு திட்டம் இருக்க வேண்டும். அந்தத் திட்டத்துக்கான ஃபார்முலாதான் 20/4/10. இதில் 20 என்பது, கார் வாங்க நீங்கள் செலுத்த வேண்டிய முன்பணம். அதைக் கையில் வைத்துக்கொண்டுதான் கார் வாங்கும் வேலையில் இறங்க வேண்டும். 4 என்பது கடனுக்கான இ.எம்.ஐ. கடன் நான்கு வருடங்களுக்குள் செலுத்தி முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் செலுத்தும் இ.எம்.ஐ, காருக்கான பெட்ரோல் செலவு எல்லாம் சேர்த்து உங்கள் மாத வருமானத்தில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த விதிமுறைக்குள் உங்கள் கார் கடன் அடங்கியிருக்க வேண்டியது அவசியம்.