Flash News : பள்ளிகளுக்கு 8 நாட்கள் தொடர் பொங்கல் விடுமுறை! புதுவை அரசு அறிவிப்பு!! மாணவர்கள் மகிழ்ச்சி!! - Asiriyar.Net

Saturday, January 11, 2020

Flash News : பள்ளிகளுக்கு 8 நாட்கள் தொடர் பொங்கல் விடுமுறை! புதுவை அரசு அறிவிப்பு!! மாணவர்கள் மகிழ்ச்சி!!




தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன் தினமான13மற்றும் 14ம் தேதிகளில் விடுமுறை அளித்தால் தொடர் விடுமுறை கிடைக்கும் என்றும், பிள்ளைகளுடன் சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் இருந்து எழுந்து வருகிறது.இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் நாளைதுவங்கி 19ம் தேதி வரை 8நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதுவை அரசு சற்று முன்னர் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில்புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை என்றுஅறிவித்துள்ளது.இதனையடுத்து ஏற்கனவே 15, 16, 17, ஆகிய நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் இனி அடுத்து பள்ளிகள் 20ஆம் தேதி தான் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று அறிவிப்பு தமிழக அரசிடமிருந்தும் வரவேண்டும் என்று பொதுமக்களும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Post Top Ad