மத்திய அரசு அறிவிக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நாட்களை, பள்ளி, கல்லுாரிகளில் கடைப்பிடிக்க உத்தரவு. - Asiriyar.Net

Friday, January 3, 2020

மத்திய அரசு அறிவிக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நாட்களை, பள்ளி, கல்லுாரிகளில் கடைப்பிடிக்க உத்தரவு.


நாடு முழுவதும் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசிடம்இருந்து, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

மாநில அரசின் பட்டியலில் கல்வித்துறை இருந்தாலும், மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், மத்திய நிதியுதவி கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு அறிவிக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நாட்களை, பள்ளி, கல்லுாரிகளில் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. மத்திய அரசு அறிவித்த, இந்திய அரசியலமைப்பு சட்ட நாள், 'பிட்' இந்தியா இயக்கம், காந்தி பிறந்த நாள் ஆகியவற்றை நடத்தியது குறித்து, ஒவ்வொரு பள்ளியும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

Post Top Ad