டி.என்.பி.எஸ்., நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த 2019 செப்., 1ல் நடந்தது. தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்த இந்த தேர்வை 16 லட்சத்து 865 பேர் எழுதினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பின்னர் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில், சில தேர்வர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த தர வரிசைப்பட்டியலை ஆய்வு செய்த போது, முதல் 100 இடங்களை பிடித்தவர்கள், ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிவர்கள் எனக்கூறப்படுகிறது. இதனால், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மற்ற தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Sunday, January 5, 2020
குரூப் 4 தேர்வில் முறைகேடு?