10. 12ஆம் வகுப்பு.. புதிய பாடத்திட்டம்... மாதிரி வினாத்தாள் வெளியிட்ட PTA.!! - Asiriyar.Net

Thursday, January 23, 2020

10. 12ஆம் வகுப்பு.. புதிய பாடத்திட்டம்... மாதிரி வினாத்தாள் வெளியிட்ட PTA.!!






புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் தேர்வு புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளதால் பாடப் புத்தகங்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு பொது தேர்வுக்கு தயாராகும் வகையில்,


மாதிரிவினாத்தாள் புத்தகங்கள் மற்றும் தீர்வு புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் 60 ரூபாய்க்கும் 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

Post Top Ad