BREAKING : 5 , 8 பொதுத்தேர்வு - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு .!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 31, 2020

BREAKING : 5 , 8 பொதுத்தேர்வு - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு .!!





5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தப்படுமா ? அல்லது வேறு பள்ளிகளில் திருத்தப்படும் என்பது பரிசீலனையில் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடந்த 13ம் தேதி வெளியிட்ட அரசாணையில் பொதுத் தேர்வில் தோல்வியடையும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் மறு தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சிறு வயதில் குழந்தைகளுக்கு மறுதேர்வு எழுத கட்டாயப்படுத்துவது மன உளைச்சலுக்கு ஆளாக்கும், அதோடு தரமான கல்வி அமுலில் உள்ள நாடுகளில் கூட 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை. ஆகவே 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வு முறையை தடை விதிக்க வேண்டும் , அது தொடர்பான அரசாணையை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி , அரவிந்தன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான ரகுபதி ராய் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தொடக்க நிலையில் வருகிறார்கள். தொடக்கக்கல்வியில் தேர்வுகளுக்கு கட்டாயமாக்க கூடாது. இது கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு எதிரானது. அதோடு குழந்தைகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும். இந்த தேர்வு முறையை தமிழக மட்டும்தான் அம்பலப்படுத்தியுள்ளது. பிற மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. ஆகவே இந்த அரசாணையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை தரமானதாக வழங்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த முறை அமல்படுத்தப்பட்டது. தேர்ச்சி பெறவில்லை எனில் மறு தேர்வு நடத்தப்படும். ஆகவே இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் மறு தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை எனில் அந்த குழந்தையின் நிலை என்ன ? என்ற கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் , விடைத்தாள் திருத்துவது குறித்து அரசு பரிசீலனை சீய்த்து வருவதாகவும் , தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை குறித்து அரசு முடிவு செய்யும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய , மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

Post Top Ad