50 வயது நிறைவு என்றால் கட்டாய ஓய்வா? விளக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 18, 2020

50 வயது நிறைவு என்றால் கட்டாய ஓய்வா? விளக்கம்




தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 வயது நிறைவு மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று, பணியில் தொடரும் அரசு ஊழியர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு அளிக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுகுறித்து ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு ஆணையே வெளியாகியுள்ளதால் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக அரசின் ஆணை வழக்கமான அரசாணை தான் இது என அரசு ஊழியர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.



விளக்கம்:-

சில வாட்சப் குழுக்களில் கீழ்கண்ட செய்தி பரப்பப்பட்டுள்ளது.

 “50 வயது நிறைவு மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று, பணியில் தொடர்ந்து வரும் அரசு ஊழியர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு – ஆணை வெளியிட்டது தமிழக அரசு” என்பது செய்தி.

 அத்துடன் அரசாணை எண் *GO (Ms) No.193 (Personnel and administrative reforms (FR-III) நாள் 23-12-2019* ம் இணைக்கப்பட்டுள்ளது. 

படித்த அரசு அலுவலர்கள் மத்தியில் இப்படி ஒரு தவறான எண்ணம் தோன்றியது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. சில அலுவலர்கள் “எனக்கு 55 வயது, 33 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறேன். என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார்களா?” என்று என்னிடம் கேள்வியும் கேட்டுள்ளனர். 

அந்த அரசு ஆணையில் எந்த இடத்திலும் இது போன்று தெரிவிக்கப்படவில்லை என்பதே உண்மை. இதுவரை ஒய்வு பெறுவோருக்கு ஓய்வுதிய ஆணைகள் Accountant General  -ஆல் முறைப்படி அளித்து விட்டு அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபரிடம் வசூலிக்கப்பட வேண்டிய பணம் எதுவும் நிலுவையில் இல்லை என்பதற்கான சான்றிதழ் சம்பந்தப் பட்ட அலுவலரால் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்துறைக்கு அனுப்பி அதன் பின்னர் முறைப்படி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கருவூலத்துறை  மற்றும் Accountant General  மின்னணு முறையில் ஓய்வுதியம் பற்றிய செயல்களை நடைமுறைப் படுத்தி வருவதால், இந்த நிலுவையில்லாச் சான்று முன்னதாகவே, அலுவலர் ஓய்வு பெறுவதற்கான ஆணை வழங்கும் பொழுதே சம்பந்தப்பட்ட துறையினரால் வழங்கப் படவேண்டும் என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு அதற்கான முறையான படிவமும் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். 

இதனை முற்றிலும் தவறாக எப்படி பதிவிட்டனர் என்பது வேதனை கலந்த வியப்பு.


 சிவ.சுதந்திரநாதன், உ.ஆ. (வவ) (ஓ) மதுரை

Post Top Ad