அரசு கல்லூரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, 280% வரை அதிகரிப்பு - Asiriyar.Net

Post Top Ad


Thursday, January 30, 2020

அரசு கல்லூரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, 280% வரை அதிகரிப்பு

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாத சம்பளத்தை ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம், தற்போதைய மாத சம்பளத்தை 280% வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


உத்தரவின் படி, திருத்தப்பட்ட ஊதியம் ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், 2017ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல், சம்பள உயர்வு கணக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், ஆசிரியர்கள் சம்பள நிலுவைத் தொகையையும் பெறுவர்.

ஆசிரியர் தேர்வு வாரியம்: 2020-21 ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு

பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களின் நிலையம் மாற்றப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் (நேர்முகத் தேர்வு), இணை பேராசிரியர் (பதவி உயர்வு ), பேராசிரியர் (பதவி உயர்வு ) போன்ற மூன்று பணியிடங்கள் மட்டும் பொறியியல் கல்லூரிகளில் இயக்கப்படும்.


பதவி உயர்வு குறித்து முடிவு செய்ய முறையாக தேர்வுக் குழு ஒன்று அமைக்கப்படும் .

ஆசிரியர்கள் ரூ .75,000 தொழில்முறை மேம்பாட்டு மானியம் (திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் அடிப்படையில்), நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களிலிருந்து வழங்கப்படும் ஆராய்ச்சி ஊக்குவிப்பு மானியம் போன்றவைகளையும் பெற தகுதியாவரக்ள.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
24ம் தேதி சென்னையில் அரசு வேலைவாய்ப்பு முகாம்: 8ம் வகுப்பு அடிப்படை தகுதி

எவ்வாறாயினும் ஓய்வூதியம், கிராஜுட்டி (பணிக்கொடை), விடுப்பு என்காஷ்மென்ட், சுகாதார காப்பீடு மற்றும் பிற முனைய சலுகைகள் தற்போதய மாநில அரசாங்க விதிகள் கீழ் இயங்கும்.

Recommend For You

Post Top Ad