Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, June 30, 2026

G.O 120 - பள்ளிப் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்க 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழு - அரசாணை




பள்ளிப் பாடத்திட்டங்கள் - ஏற்கனவே அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மாற்றி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!




தமிழக பள்ளிக்கல்வியில், புதிய பாடத்திட்டம் உருவாக்குவதற்காக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில், புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசின், 'தேசிய கல்வி கொள்கை - 2020'க்கு மாற்றாக, தமிழக அரசு கடந்த ஆண்டு, மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டது.


'அதன் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கான, புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்க, இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமையில், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில், பாடத்திட்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டது.


இந்நிலையில், கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை, தமிழக அரசு ரத்து செய்து, 'மாநில பாடத்திட்டம் மற்றும் பாடநுால் உருவாக்கம்' என்ற புதிய குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.


குழுவின் தலைவராக, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக, ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., எனும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி வெங்கடேஷ்வரன், சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் உட்பட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மாநில ஆசிரியர் கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர், உறுப்பினர் செயலராகவும், பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குந ர்கள் ஆகியோர், உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.


No comments:

Post a Comment

LightBlog