Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, June 30, 2026

வந்தது 6000 போனது 7000 - சிறப்பு நிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி




வந்தது 6000 போனது 7000 - சிறப்பு நிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

*20 ஆண்டு பணிக்கால நிறைவில் சிறப்பு நிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த மாதம் டபுள் இன்கிரிமென்ட் வழங்கப்பட்டு ஆனந்த நிலையில் அகமகிழ்ந்து இருந்தார்கள். ஆனால் ஊதியம் வங்கியில் வரவு வைக்கப்பட்ட போது அவர்களுக்கு இதயத்தில் இடி இறங்கியது போல் ஊதியத்தொகை குறைந்து இருந்தது.*

*இரண்டு ஊதிய உயர்வுகள் பெற்று ஊதியம் பெருமளவில் உயர்ந்து இருக்கும் என்ற எண்ணத்தில் வங்கி கணக்கை பார்த்தால் கடந்த மாதத்தை விட ஆயிரம் ரூபாய் குறைந்து இருந்தது. காரணத்தை தேடிய போது வருமான வரி தொகையாக ஏழாயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது தெரியவந்தது*

*இதுவரை வருமான வரி உச்சவரமான 12 லட்சத்திற்கு கீழ் வருமானம் பெற்று வந்த மேற்படி ஆசிரியர்கள் சிறப்பு நிலை ஊதிய உயர்வுகள் பெற்றதன் மூலமாக 12 லட்சத்தை கடந்து ஊதியம் பெற்றதால் அவர்களுக்கு 4 லட்சத்திலிருந்து வருமான வரி கணக்கிட்டு ரூபாய் 7000 இந்த மாதம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இனி எது மாத மாதம் தொடரும்.*

*இரண்டு ஊதிய உயர்வுகள் பெற்று ஊதியம் குறைந்து போனதால் உற்சாகம் இழந்து மன உளைச்சலுடன் இடைநிலை ஆசிரியர்கள் காணப்படுகிறார்கள்.*

*கையில வாங்கினேன், பையில போடல... காசு போன இடம் தெரியல..


No comments:

Post a Comment

LightBlog