Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, June 8, 2026

அரசாணை எண் 243ன் படி பதவி உயர்வு வழங்க வேண்டும் - ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்




தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசாணை எண் 243ன் படி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


ராமநாதபுரத்தில் சங்க மாநில நிறுவனத் தலைவர் ஜி.கிருஷ்ணன் கூறியதாவது:


கடந்த தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அரசாணை 243படி நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.


பணி மூப்பு அடிப்படையில் மாவட்ட தொடக்கப்பள்ளி கல்வி அலுவலகத்தில் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களை நேர்முக உதவியாளராக நியமிக்க வேண்டும்.


மூத்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.


உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து முழுமையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் விஜய் அமல்படுத்த வேண்டும்.


இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றார்.


1 comment:

LightBlog