ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விவரங்கள் கோரி CEO சுற்றறிக்கை - Asiriyar.Net

Friday, June 12, 2026

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விவரங்கள் கோரி CEO சுற்றறிக்கை

ந.க.எண்    3570 /அ3/2026, நாள் 10.06.2026

அனைத்து அரசு /  நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப்  பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று (10.06.2026) இரு படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

1. அதில் Sec.Gr.Teacher / Spl.Tr.and PET Service Details என்ற படிவத்தில் தற்போது அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் (இசை,ஓவியம்,தையல்) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Passed Teachers only) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மட்டும் கலம் 1 முதல் 26 வரை கோரியுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 12..6.2026க்குள் ceotrichya3@gmail.com அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

2. அடுத்தப்படியாக இரண்டாம் படிவத்தில் தற்போது அரசு/நகராட்சி உநிப/மேநிப பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மட்டும் கலம் 1 முதல் 23 வரை கோரியுள்ள விவரங்களை பூரத்தி செய்து 13.6.2026 க்கு ceotrichya3@gmail.com அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

Note: TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் (TET Not qualified or Not Passed) விவரங்களை இப்படிவத்தில் கொண்டுவரவேண்டாம்.

மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு இப்படிவத்தில் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட நகல் மற்றும், சார்ந்த ஆசிரியரின் படிவத்தில் பூர்த்தி செய்துள்ள  விவரங்களுக்கு உரிய SR கருத்துரு நகல் ,TET தேர்ச்சி பெற்ற சான்றிதழ்    தங்கள் அலுவலகப் பிரிவு எழுத்தர்/தனி நபர்  மூலம் 12.06.2026 மாலை 5.00 மணிக்குள் எவ்வித தாமதமுமின்றி,  முதன்மைக் கல்வி அலுவலகம், A3 பிரிவு எழுத்தரிடம் நேரில் வந்து ஒப்படைத்திட தெரிவிக்கப்படுகிறது.








No comments:

Post a Comment

Post Top Ad