Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, June 8, 2026

பதவி உயர்வுக்கு டெட் விலக்கு; தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 18% ஒதுக்கீடு - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.




தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இனி டெட் தேர்வு தேவையில்லை என்றும், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அதிரடி பணி விதிமுறை மாற்றங்களை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களைச் செய்து தமிழக அரசு தற்போது அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளையும், பணிசார்ந்த தேவைகளையும் கருத்தில் கொண்டு இந்த அதிரடி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறை மாற்றங்களின்படி, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு, இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பதவி உயர்வை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்குப் மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

மேலும், தொடக்கக் கல்வித்துறையில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறையில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மற்றொரு முக்கிய மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் போது, அதில் 18 விழுக்காடு (18%) வாய்ப்புகள் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment

LightBlog