தமிழகத்தில் ‘டெட் ’(ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வில் குறைந்தபட்சம் ரூ.45 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு தயாராக வசதியாக ஜூலை 7 ல் நடக்கும் தகுதித்தேர்வை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
நிறுவன தலைவர் மாயவன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
2011க்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் டெட் (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுத வேண்டிய அவசியமில்லை என்று தமிழக அரசு தெளிவாக கூறிவிட்டது. இந்நிலையில் டெட் தொடர்பான வழக்கில் ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ‘டெட்’ தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
‘டெட்’ எழுதாமல் உள்ள ஆசிரியர்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆசிரியர்களும் அவர்கள் போதிக்கும் பாடம், கல்வி உளவியல் ஆகிய இரு பாடங்களில் மட்டும் தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்துவதற்கு பணி அமர்த்தபட்டவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருந்ததால் ஜூலை 5 ல் நடைபெற உள்ள டெட் தேர்வுக்கு தயாராகவில்லை. எனவே டெட் தேர்வை மேலும் ஒரு மாதம் தள்ளி வைக்க வேண்டும்.
பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி கையேடுகளை பாடவாரியாக தயாரித்து தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 2028 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் பள்ளிக் கல்வித்துறை விரைந்து செயல்பட்டு முன்னுரிமை பட்டியல் தயாரித்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை பள்ளி தலைமை யாசிரியர், முதுநிலை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment