போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு - DEO Proceedings - Asiriyar.Net

Friday, April 5, 2024

போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு - DEO Proceedings

 




திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் கல்விமாவட்டம் , வடமதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க தெளிவுரை வேண்டி கருத்துரு பெறப்பட்டுள்ளது. கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டது.


 பார்வை 3 இல் காண் அரசுக்கடிதத்தில் தெரிவித்துள்ள படி மருத்துவ விடுப்பு தவிர பிற விடுப்புகள் அனுமதிக்கக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை தற்போதைய நிலையில் ஏற்க இயலாது என வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.


 அரசுக்கு எதிராக போராட்டத்தில் ( 19.02.2024 முதல் 08.03.2024 வரை ) கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் மேலும் 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகள் ஊதியத்தில் ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது . எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற கடிதங்கள் , தெளிவுரைகள் கேட்பதை தவிர்க்குமாறு வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது .


Click Here to Download - Strike Days EL Request - DEO Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad