தேர்தல் நடக்கும் வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா? - Asiriyar.Net

Sunday, April 14, 2024

தேர்தல் நடக்கும் வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா?

 



இந்த ஆண்டு மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்புகள் மார்ச் 20ல் வெளியிடப் பட்டது.


அதன் பின்னர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு தற்போது ஏப்ரல் 22, 23 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் முதலில் வெளியிடப்பட்ட செயல்முறையில் ஆசிரியர்கள் ஏப்ரல் 23 முதல் 26 வரை பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஏப்ரல் 15 முதல் தேர்தல் நாள் ஏப்ரல் 19 வரை ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சி , 18வது மக்களவைத் தேர்தல் பணிகளில் கலந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதாவது அந்த நாட்களில் ஆசிரியர் கள் தேர்தல் பணியைச் சிறப்பாகச் செய்ய அந்த வாரம் முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது போல் இருந்தது. அதுவும் ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 வரை மட்டும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஏப்ரல் 22 கூட ஆசிரியர்களுக்கு பள்ளி வர வேண்டும் என அறிவுறுத்தவில்லை


பின்னர் ஒரு சில மாவட்டக் கல்வி அலுவலர்களே ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தரும் நாட்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய நாட்கள் என செயல்முறைகள் வெளியிட்டனர். அதில் ஏப்ரல் 26 வரை விடுமுறை தவிர்த்து அனைத்து நாட்களும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என வெளியிட்டனர். வழக்கம் போல் நமது ஆசிரியப் பெருமக்களும் அதை வாட்சப்பில் உலவ விட்டு தமிழ்நாடு முழுவதும் அதே என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்..


எனவே தமிழ் நாடு முழுமைக்கும் தேர்தல் நடக்கும் வாரம் ஏப்ரல் 15 முதல் 19 வரை ஆசிரியர்கள் பள்ளி செல்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


தேர்தல் பயிற்சி மற்றும் தேர்தல் பணி என அடுத்தடுத்து பரபரப்பான சூழ்நிலையில் இந்த விலக்கு உபயோகமாக அமையும்


மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் திருத்தும் பணி ஆகியன கண்டிப்பாக முடிந்திருக்கும்.


மீதிப் பணிகள் ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 26 வரை சிறப்பாக முடித்துக் கொள்ளலாம்.


இந்த நாட்களில் ஆசிரியர்களுக்கு பள்ளி செல்வதிலிருந்து விலக்கு அளிப்பதால் வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்தை சொந்த ஊரில் விட்டு வர வாய்ப்பாக அமையும்


மேலும் கணவன் மனைவி இருவரும் வெளி மாவட்டங்களில் தேர்தல் பணியாற்றும் சூழலில் குழந்தைகளை உறவினர்கள் வீடுகளில் விட்டு வர உதவியாக அமையும்.


ஓரளவு ஓய்வுக்குப் பின்னர் தேர்தல் பணியும் சிறப்பாக ஆற்ற முடியும்.


எனவே ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 19 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்


இந்தக் கோரிக்கையை அனைத்துச் சங்கங்களும் அரசிடம் வலியுறுத்த வேண்டும். இந்த விலக்கு ஆசிரியர்கள் தேர்தல் பணி சிறப்பாக ஆற்ற உதவியாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு விலக்குப் பெற்றுத் தர வேண்டும்.




No comments:

Post a Comment

Post Top Ad