2ம் கட்ட தேர்தல் பயிற்சி (07.04.2024) வகுப்பில் கலந்துகொண்ட அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட மறு பயிற்சி - மாவட்ட ஆட்சியரின் கடிதம்! - Asiriyar.Net

Wednesday, April 10, 2024

2ம் கட்ட தேர்தல் பயிற்சி (07.04.2024) வகுப்பில் கலந்துகொண்ட அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட மறு பயிற்சி - மாவட்ட ஆட்சியரின் கடிதம்!

 

தஞ்சாவூர் மாவட்டம் 30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ( Polling Personnel ) இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு ( Second Repeat Training Class ) ஏற்கனவே நடத்தப்பட்ட பயிற்சி மையங்களில் எதிர்வரும் 12.04.2024 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடத்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளளது.


 கடந்த 07.04.2024 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பில் ( Second Repeat Training Class ) கலந்து கொள்ள உள்ளனர் . எனவே , அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் பயிற்சி பெற ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 


மேலும் , மேற்காணும் பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு , அதன் விபரத்தினை இவ்வலுவலகத்திற்கு உடன் தெரிவித்திடவும் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திடவும் கேட்டுக்கொள்கிறேன் 
Post Top Ad