குழு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் .2009 - இன்படி பள்ளி மற்றும் குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது .
பள்ளிகளை அனைத்து வகையிலும் மேம்படுத்திக் குழுந்தைகளுக்குத் தரமான கல்வியை உறுதி செய்திட சமூகத்தின் ஒரு அங்கமான பெற்றோர்களின் பங்கேற்பு என்பது மிகவும் முக்கியமானது.
அதனடிப்படையில் , பார்வையின்படி பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பானது கடந்த 2022 - ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழு குறித்த முதற்கட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது .
பள்ளி மேம்பாடு மற்றும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியப் பங்குவகிக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானதாகும் . எனவே . முதற்கட்டமாக மாநில அளவில் தெரிவுசெய்யப்பட்ட 48 முதன்மைக் கருத்தாளர்களுக்கு ( மாநிலப் பயிற்சி அலகு- STU ) ( BRTEs : 41 மற்றும் DIET Faculties : 7 ) உண்டு உறைவிடப் பயிற்சியாக சேலம் , ஏற்காட்டில் " நெறியாளுகைத் திறன் " பயிற்சியானது 27.05.2023 முதல் 31.05.2023 வரை நடத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக மாவட்ட முதன்மைக் கருத்தாளர்கள் ( மாவட்ட பயிற்சி அலகு - DTU ) பயிற்சியானது தெரிவுசெய்யப்பட்ட BRTEs ஒரு வட்டாரத்திற்கு இருவர் மற்றும் SMC - DC ஒருவர் ஆகியோருக்கு இரண்டு நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சியாக மண்டல அளவில் 14.09.2023 முதல் 12.10.2023 வரை நடத்தப்பட்டது.
மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ( BRTEs ) மாவட்டக் கருத்தாளர்களைக் கொண்டும் . தெரிவுசெய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டும் பயிற்சியினை கீழ்க்காண் விவரப்படி நவம்பர் -2023 மாதத்தில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது .
Click Here to Download - SMC Members Training_Nov 2023 - SPD Proceedings - Pdf
No comments:
Post a Comment