நீங்க பள்ளிக்கூடத்துக்கு வரலன்னா, நான் உங்க வீட்டுக்கே வருவேன்-ஆட்சியர் அதிரடி திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று சில காரணங்களால் பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவர்களின் வீட்டிற்கே தேடிச்சென்று தனது காரிலேயே அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் IAS அதிரடி நடவடிக்கை.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க முதற்கட்டமாக நாட்றம்பள்ளி அடுத்த தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து இடைநின்ற 31 மாணவர்களின் வீட்டிற்கே சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவரும் நடவடிக்கை ஆட்சியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment